/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் படகு கவிழ்ந்தது இரண்டு மீனவர்கள் மீட்பு
/
பழவேற்காடில் படகு கவிழ்ந்தது இரண்டு மீனவர்கள் மீட்பு
பழவேற்காடில் படகு கவிழ்ந்தது இரண்டு மீனவர்கள் மீட்பு
பழவேற்காடில் படகு கவிழ்ந்தது இரண்டு மீனவர்கள் மீட்பு
ADDED : டிச 11, 2024 01:32 AM

பழவேற்காடு:பழவேற்காடு மீனவப்பகுதியில் உள்ள பசியவாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதிஷ்குமார், 35. நேற்று அதிகாலை, சக மீனவர் மூர்த்தி, 38, என்பவருடன், கடலில் மீன்பிடிக்க பைபர் படகில் சென்றார்.
முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்லும்போது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சதிஷ்குமார், மூர்த்தி ஆகியோர் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
அப்போது அவ்வழியாக மீன்பிடிக்க சென்ற சக மீனவர்கள், இருவரையும் பத்திரமாக மீட்டனர். கவிழ்ந்த படகை மற்றொரு படகின் உதவியுடன், கரைக்கு கொண்டு வந்தனர்.
படகு கவிழ்ந்தபோது, அதிலிருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளும், தொலை தொடர்பு சாதனமான'வாக்கி டாக்கி'யும் கடல் அடித்து செல்லப்பட்டது. படகின் பல்வேறு பகுதிகள் உடைந்து சேதம் அடைந்து உள்ளன.
கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த சம்பவம் மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.