ADDED : செப் 25, 2026 04:11 PM
பொதட்டூர்பேட்டை, செப். 26-–
முன்விரோதம் காரணமாக, 80 வயது மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை அடுத்த வாணிவிலாசபுரத்தை சேர்ந்தவர் நவரசன், 26. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் குடும்பத்திற்கும், முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மது போதையில் இருந்து தமிழ்செல்வன், நவரசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்களை நவரசனின் பாட்டி தனகோட்டி, 80, சமரசம் செய்ய முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வனும், அவருக்கு ஆதரவாக வந்திருந்த, அவரது சகோதரர் பாலு, 34, என்பவரும், தனகோட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தமிழ்செல்வன் மற்றும் பாலுவை, பொதட்டூர்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
