/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சரக்கு வேன் -- ஆட்டோ மோதி இருவர் பலி
/
சரக்கு வேன் -- ஆட்டோ மோதி இருவர் பலி
ADDED : அக் 02, 2025 10:39 PM
திருவள்ளூர், தி ருவள்ளூர் அருகே சரக்கு வேன் ஆட்டோ மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் அடுத்த ஐசிஎம்ஆர் அருகே சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் நேற்று மாலை 4:00 மணியளவில் பயணியர் ஆட்டோவும் டாடா ஏஸ் சரக்கு வேனும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் வந்த இருவர் உயிரிழந்தனர்.
தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் வந்து உடல்களை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில், ஆட்டோவில் வந்தவர்கள் பெரியபாளையம் அடுத்த மஞ்சாங்காரனை மற்றும் ஏரிகுப்பம் பகுதியை சேர்ந்த ஜெகந்நாதன், 30 ஜெயபிரகாஷ், 30 ஆகியோர் என தெரிந்தது. விபத்து ஏற்படுத்திய சரக்கு வேன் ஓட்டுநர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.