ADDED : மார் 05, 2024 09:03 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பஜாரில், கடந்த, 3ம் தேதி இரவு, ரவுடிகள் சிலர், அங்குள்ள ஜவுளிக்கடைக்கு சென்று துணிகளை எடுத்தனர்.
அதற்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். ஊழியர்கள் பணம் கேட்டபோது, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, முதல் மாடியில் இருந்து குதித்து தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பையும், வியாபாரிகளிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, செங்குன்றம் உதவி கமிஷனர் ராஜாராபர்ட் தலைமையில், தனிப்படை போலீசார் தப்பியோடிய ரவுடிகளை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய பொன்னேரி வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்த விஜி, 32, முருகன், 28, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இருவரையும், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
