ADDED : ஜன 21, 2026 06:35 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: வீட்டில் கஞ்சா பதுக்கிய வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி அடுத்த மத்துார் பகுதியில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் மத்துாரைச் சேர்ந்த உதயகுமார், 27, என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 1.20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார், 23, சந்திரன், 25, ஆகிய இருவருக்கும் கஞ்சா விற்பனையில் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
நேற்று, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீசார், 54,000 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
