/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெள்ளி திருட்டு வழக்கு மேலும் இருவர் சிக்கினர் 510 கிலோ பறிமுதல்
/
வெள்ளி திருட்டு வழக்கு மேலும் இருவர் சிக்கினர் 510 கிலோ பறிமுதல்
வெள்ளி திருட்டு வழக்கு மேலும் இருவர் சிக்கினர் 510 கிலோ பறிமுதல்
வெள்ளி திருட்டு வழக்கு மேலும் இருவர் சிக்கினர் 510 கிலோ பறிமுதல்
ADDED : ஏப் 13, 2025 09:05 PM
மீஞ்சூர்:லண்டனில் இருந்து 39,000 கிலோ எடையிலான 1,305 வெள்ளிக்கட்டிகளை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இறக்குமதி செய்தது.
இவை, சென்னை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில், கடந்த வாரம் கன்டெய்னரில் வந்திறங்கியது. அந்த கன்டெய்னரில் இருந்து, 922 கிலோ எடையிலான 30 வெள்ளிக் கட்டிகள் மாயமாகின. இதன் மதிப்பு, 9 கோடி ரூபாய். இதுகுறித்து, காட்டூர் போலீசார் விசாரித்தனர்.
கடந்த 11ம் தேதி, மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். நேற்று, சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகம்மது, 56, மணலியை சேர்ந்த சண்முகவேல், 32, ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில், தற்போது வரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள, 510 கிலோ கொண்ட, 17 வெள்ளிக்கட்டிகள், 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.