ADDED : பிப் 26, 2024 11:29 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, மா.பொ.சி., நகரைச் சேர்ந்தவர் சுதாகர், 32. பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இம்மாதம், 22ம் தேதி, வெளியே புறப்பட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே கும்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 43. கூலி தொழிலாளி. இம்மாதம், 20ம் தேதி முதல் அவரை காணவில்லை. ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
