/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் கடையில் தகராறு இருவர் மண்டை உடைப்பு: மூவர் கைது
/
டாஸ்மாக் கடையில் தகராறு இருவர் மண்டை உடைப்பு: மூவர் கைது
டாஸ்மாக் கடையில் தகராறு இருவர் மண்டை உடைப்பு: மூவர் கைது
டாஸ்மாக் கடையில் தகராறு இருவர் மண்டை உடைப்பு: மூவர் கைது
ADDED : ஆக 11, 2025 11:09 PM
திருத்தணி, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், பீர்பாட்டிலால், இருவரின் மண்டையை உடைத்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை - நொச்சலி மாநில நெடுஞ்சாலை, கே.ஜி.கண்டிகை சமுதாய கூடம் அருகே இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு, வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, 28, மணி, 27 ஆகியோர் மதுபாட்டில்கள் வாங்குவதற்கு வந்தனர்.
அதே நேரத்தில், செருக்கனுார் கிராமத்தைச் சேர்ந்த, புஷ்பராஜ், 30, விமல், 27, வசந்தகுமார், 29 உள்பட ஆறு பேர் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் தங்களுக்கு வேண்டிய மதுபாட்டில்களை கேட்டு வாங்கும் போது, வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, செருக்கனுாரை சேர்ந்த, ஆறு பேரும் பீர்பாட்டில்களால், முரளி, மணி ஆகியோர் மீது தாக்கினர். இதில் முரளி, மணியின் தலையில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த முரளி, மணி திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, புஷ்பராஜ், விமல், வசந்தகுமார் ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.

