தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ டூ-விலர் திருடியவர் கைது 4 வாகனங்கள் பறிமுதல்

டூ-விலர் திருடியவர் கைது 4 வாகனங்கள் பறிமுதல்

டூ-விலர் திருடியவர் கைது 4 வாகனங்கள் பறிமுதல்


ADDED : நவ 02, 2024 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2024 02:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தணி:திருத்தணி போலீஸ் சப் - டிவிஷனில், சில மாதங்களாக வீடுகள் மற்றும் கடைகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்வது தொடர்ந்தது. முருகன் மலைக்கோவிலில் நிறுத்தப்படும் பக்தர்களின் இரு சக்கர வாகனங்களும் அதிகளவில் திருடு போயின.

இது குறித்து திருத்தணி, ஆர்.கே.பேட்டை, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய ஆறு போலீஸ் நிலையங்களில், பாதிக்கப்பட்டோர் தரப்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவுப்படி, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, திருத்தணி மற்றும் அரக்கோணம் பகுதிகளில் மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, ராமாபுரத்தை சேர்ந்த சுரேஷ், 36 என்பவர், தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us