/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊரக வளர்ச்சி துறையில் இரு பதவி ஒன்றாக இணைப்பு
/
ஊரக வளர்ச்சி துறையில் இரு பதவி ஒன்றாக இணைப்பு
ADDED : டிச 26, 2025 06:42 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், ஊராட்சி உதவி இயக்குநர் மற்றும் தணிக்கை உதவி இயக்குநர் பதவிகள், ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உதவி இயக்குநர் - ஊராட்சி, உதவி இயக்குநர் - தணிக்கை என, இரு வேறு பதவிகள் உள்ளன.
அரசின் நிர்வாக காரணங்களுக்காகவும், மக்களின் நலன் கருதியும், இப்பதவிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளது.
மேலும், உதவி இயக்குநர் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை என்ற ஒருங்கிணைந்த பதவி உருவாக்கப்பட்டு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் மீஞ்சூர் - 55, கும்மிடிப்பூண்டி - 61, எல்லாபுரம் - 53 ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட 169 ஊராட்சிகள் உள்ளன.
மத்திய மாவட்டத்தில், திருவள்ளூர் - 38, பூண்டி - 49 மற்றும் சோழவரம் - 39, பூந்தமல்லி - 28, வில்லிவாக்கம் - 13 மற்றும் புழல் - 7 என, 174 ஊராட்சிகள் உள்ளன.
மேற்கு மாவட்டத்தில், திருத்தணி - 27, திருவாலங்காடு - 42, பள்ளிப்பட்டு - 33, ஆர்.கே.பேட்டை - 38, கடம்பத்துார் - 43 என, 183 ஊராட்சிகள் உள்ளன.
மறுசீரமைக்கப்பட்ட மூன்று அலுவலகங்களும், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக கட்டடத்தில் செயல்படும்.

