/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு இரு மாணவியர் தலையில் காயம்
/
கல் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு இரு மாணவியர் தலையில் காயம்
கல் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு இரு மாணவியர் தலையில் காயம்
கல் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு இரு மாணவியர் தலையில் காயம்
ADDED : பிப் 07, 2025 09:58 PM
கும்மிடிப்பூண்டி:பொன்னேரியில் இருந்து, கவரைப்பேட்டை வழியாக தேர்வாய் நோக்கி, தடம் எண்:டி37, அரசு பேருந்து, நேற்று முன்தினம் இரவு சென்றுக் கொண்டிருந்தது.
கவரைப்பேட்டையில், டியூஷன் முடிந்து காத்திருந்த, ஏராளமான பள்ளி மாணவ - மாணவியர் பேருந்தில் ஏறினர். சில மாணவர்கள், பேருந்தின் படிகளில் நின்றபடி தானியங்கி கதவுகளை மூட விடாமல் பஸ்சை தட்டிக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளனர்.
ஓட்டுநரும், நடத்துநரும் மேலே ஏறி வரும்படி பல முறை தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லை. பயணியர் தெரிவித்ததன்படி, தண்டலச்சேரியில் அவர்களை இறக்கி விட்டனர்.
பேருந்தை பின் தொடர்ந்து, டூ - -வீலரில் வந்த இரு மர்ம நபர்கள், பேருந்து மீது கல் வீசி, பின்புற கண்ணாடியை உடைத்தனர். பின் இருக்கையில் அமர்ந்து வந்த, குருவராஜகண்டிகை கிராம பள்ளி மாணவி பிரியதர்ஷினி, 17, தேர்வாய் கிராம மாணவி, திவ்யா, 17, ஆகியோருக்கு தலையில் கண்ணாடி கிழித்து காயம் ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையில் இருவருக்கும் தலையில் தையல் போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேருந்தின் ஓட்டுநரான, கன்னிகைபேர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், 55, அளித்த புகாரின்படி, கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.