தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ செயின் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது

 செயின் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது

 செயின் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது


ADDED : மார் 07, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது போல் வீடு புகுந்து பெண்ணின் செயினை பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே பெரியநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி மனைவி சுஜாதா, 29. இவருக்கு, மூன்றரை வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் குழந்தை உள்ளது. கடந்த பிப்., 3ம் தேதி, பகல் நேரத்தில், வீட்டில் சுஜாதா தனியாக இருந்த போது, இரு மர்ம நபர்கள் பைக்கில் வந்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக தெரிவித்து, சுஜாதாவை நம்ப வைத்தனர். சிகிச்சை அளிப்பதற்காக வீட்டிற்குள் சென்று, சுஜாதா அசந்த நேரத்தில், அவர் அணிந்திருந்த, 4.50 சவரன் செயினை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதிகளில் உள்ள 'சிசிடிவி' கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர்.

அவர்கள், கர்நாடக மாநிலம் சிக்பால்பூர் மாவட்டம், பட்லஹல்லியைச் சேர்ந்த கோபி, 34, மணி, 19, என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் திருடியதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us