/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு சுற்றுலா பஸ் மீது மோதி டூ --- வீலரில் சென்றவர் பலி
/
அரசு சுற்றுலா பஸ் மீது மோதி டூ --- வீலரில் சென்றவர் பலி
அரசு சுற்றுலா பஸ் மீது மோதி டூ --- வீலரில் சென்றவர் பலி
அரசு சுற்றுலா பஸ் மீது மோதி டூ --- வீலரில் சென்றவர் பலி
ADDED : செப் 19, 2024 07:52 PM
திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா முனியப்பன் நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன், 32. இவர், சென்னை ஆவடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். இவருக்கு நாகவல்லி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஹரி கிருஷ்ணன் குடும்பத்துடன் ஆவடியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தன் கிராமத்திற்கு வந்தவர் பெற்றோரை பார்த்துவிட்டு, நேற்று காலை ஆவடி நோக்கி 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.
சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த ஆற்காடுகுப்பம் சிவன் கோவில் அருகே சென்றபோது, எதிர்திசையில் திருத்தணி நோக்கி சென்ற அரசு சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதினார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.