தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ டூ – வீலரில் மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்

டூ – வீலரில் மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்

டூ – வீலரில் மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்


ADDED : செப் 28, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி, செப். 29–

திருத்தணி பகுதியில், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று மாலை, திருத்தணி போலீசார் முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருத்தணி நோக்கி வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 99 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில், திருத்தணி சுப்ரமணிய நகரைச் சேர்ந்த தனசேகர், 55, என்பதும், மத்துார் டாஸ்மாக் கடையில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி வந்து, திருத்தணியில் கூடுதல் விலைக்கு விற்க முயன்றதும் தெரிய வந்தது.

திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, நேற்று தனசேகரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us