நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சி விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ரகுராமன், 30. இவர், கனகம்மாசத்திரம் அடுத்த அத்திப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் 'ஹூரோ ஹோண்டா பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று விட்டு, இரவு வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு தூங்கினார்.
நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில், சின்னம்மாபேட்டை பகுதியில் மட்டும் ஆறு இருசக்கர வாகனம் திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.