/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விலாசம் கேட்பது போல் நடித்து டூ-விலர் திருட்டு
/
விலாசம் கேட்பது போல் நடித்து டூ-விலர் திருட்டு
ADDED : ஏப் 02, 2025 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ராணிப்பேட்டை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ், 31. இவர் நேற்று, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், தன் மகளை ஏற்றிக் கொண்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், தலையாறிதாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே, கோகுல்ராஜ் வாகனத்தை நிறுத்தினார். அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், கோகுல்ராஜிடம் விலாசம் கேட்டனர்.
மூவரில் ஒருவர் திடீரென கோகுல்ராஜின் ஸ்கூட்டரை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

