ADDED : நவ 23, 2026 06:18 PM
அ நிறம் | அளவு
பள்ளிப்பட்டு: ஆந்திர மாநிலத்தில் இருந்து பள்ளிப்பட்டுக்கு வந்த நபரின் இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், நகரி அடுத்த குமாரபொம்மராஜிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ், 34. இவர், பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கிராமத்திற்கு, இன்று (நவ.,23) அவரது ‘ஹோண்டா ஷைன்’ இருசக்கர வாகனத்தில் வந்திருந்தார்.
நெடியம் பேருந்து நிறுத்தத்தில், அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நண்பரை பார்க்க சென்றிருந்தார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைத்திருந்த அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த நரேஷ், பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிந்த போலீசார், இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
