ADDED : மார் 04, 2024 06:32 AM
ஊத்துக்கோட்டை; வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது வதட்டூர்காலனி. இங்கு வசித்து வருபவர் முனிரத்தினம், 43. இவரது இரண்டாவது மகள் பூஜா, 19. இந்து கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அடிக்கடி மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
இந்நிலையில் 29ம் தேதி காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. முனிரத்தினம் வெங்கல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன பூஜாவை தேடி வருகின்றனர்.
ஆயலுார் கிராமத்தில் வசித்து வரும் துரைசிங்கம் மகள் பவித்ரா, 23. சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். 1ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து துரைசிங்கம் கொடுத்த புகாரின் பேரில், வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன பவித்ராவை தேடி வருகின்றனர்.
