/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலகம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலகம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலகம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலகம்
ADDED : டிச 22, 2024 01:13 AM

உளுந்தை:கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலகம், கடந்த 2022ல் ஏற்பட்ட மழையில் சேதமடைந்தது. இதையடுத்து, ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம இ - சேவை மையத்தில் செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து, தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின்கீழ், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, 2022ம் ஆண்டு துவங்க கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஓராண்டாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கின்றனர்.
ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு கடைசி பில் தொகை 3.20 லட்சம் ரூபாய் ஒன்றிய நிர்வாகம் வழங்காததால் பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, உளுந்தை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கடம்பத்துார் பி.டி.ஓ., ஒருவர் கூறுகையில், ''உளுந்தை ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஆய்வு செய்து ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கவும், பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.