/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமதியின்றி கால்வாய் பணி குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
அனுமதியின்றி கால்வாய் பணி குழாய் உடைந்து குடிநீர் வீண்
அனுமதியின்றி கால்வாய் பணி குழாய் உடைந்து குடிநீர் வீண்
அனுமதியின்றி கால்வாய் பணி குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : அக் 27, 2025 11:20 PM

பண்ணுார்: பண்ணுாரில் அரசு அனுமதியின்றி தனிநபர் ஒருவர் கால்வாய் தோண்டும் பணி மேற்கொண்டதில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
திருப்பந்தியூர் ஊராட்சி பண்ணுாரைச் சேர்ந்தவர் ஜோஸ்பின், 50.
இவர், கடந்த மாதம் 28ம் தேதி, தன் வீட்டிலிருந்து கழிவுநீர் செல்லும் வகையில், எவ்வித அனுமதியும் பெறாமல், குடியிருப்பு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி மேற்கொண்டார்.
இதில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட இரு குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இதையடுத்து, அப்பகுதிவாசிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு போலீசார், அப்பகுதிக்கு விரைந்து வந்து, பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தினர்.
இதனால் சேதமடைந்த குழாய் வழியாக ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

