/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி
/
பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி
ADDED : ஜன 11, 2025 11:49 PM

புதுச்சத்திரம்:பூந்தமல்லி ஒன்றியம், கொரட்டூர் ஊராட்சிக்குட்பட்டது புதுச்சத்திரம். இங்குள்ள சிவன்கோவில் அருகே பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, 15 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, போதிய பராமரிப்பில்லாததால், மிகவும் சேதமடைந்து பரிதாப நிலையில் உள்ளது. மேலும், குழாய் வால்வு பகுதி சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
இவ்வாறு வீணாகும் குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே குளம்போல் தேங்கியுள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெறாமேலேயே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சத்திரம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

