/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை துறை மாளிகை
/
கும்மிடியில் பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை துறை மாளிகை
கும்மிடியில் பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை துறை மாளிகை
கும்மிடியில் பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை துறை மாளிகை
ADDED : நவ 07, 2025 07:27 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலை துறை மாளிகை பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் உள்ளது.
கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் நெடுஞ்சாலைத் துறையின், உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. அதில் பழமையான அலுவலகம் மற்றும் ஆய்வு மாளிகை உள்ளது.
தனித்தனியாக இரு அறைகள் கொண்ட அந்த ஆய்வு மாளிகை பாழடைந்துள்ளது.
ஒரு அறை கிடங்காகவும், மறு அறை அலுவலக பயன்பாட்டிற்காகவும் உள்ளது.
பொதுவாக ஆய்வு மாளிகை என்பது, அரசு துறை சார்ந்த அலுவலர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அரசு முறை பயணமாகவோ அல்லது ஆய்வு மேற்கொள்ள வரும் போது, ஓய்வு எடுக்க பயன்படுத்தப்படும். ஆனால் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆய்வு மாளிகை பல ஆண்டு காலமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
தொழில் நகரமான கும்மிடிப்பூண்டியில், கூடுதல் அறைகள் கொண்ட நவீன மயமான புதிய ஆய்வு மாளிகை நிறுவ வேண்டும்.
மேலும், பாழடைந்த நிலையில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தையும் இடித்து, புதிய கட்டடம் நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

