/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சத்தியவேடு சாலையில் பராமரிப்பில்லாத நடைபாதை
/
சத்தியவேடு சாலையில் பராமரிப்பில்லாத நடைபாதை
ADDED : டிச 28, 2025 06:41 AM

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், நடைபாதை இருந்தும் பராமரிப்பில்லாமல் உள்ளதால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலை, மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், அந்த சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, கவரைப்பேட்டைக்கு உட்பட்ட அந்த சாலையில், ஒரு கி.மீ., துாரம் தடுப்புகள் அமைத்து நடைபாதை ஏற்படுத்தப்பட்டது. முறையான பராமரிப்பின்றி, அடுத்த சில மாதங்களில், பல இடங்களில் தடுப்புகள் முறிந்து போயின.
அதன்பின் நடைபாதைகளில் செடி, கொடிகள், குப்பைகள் சூழ்ந்தன. தற்போது, அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாதபடி மோசமான நிலையில் உள்ளது.
போக்குவரத்து நெருக்கடியில், பாதசாரிகள் பாதுகாப்பாக கடந்து செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைபாதை முறையான பராமரிப்பின்றி பயனற்று கிடப்பதை கண்டு பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உடனடியாக மாநில நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து, நடைபாதை மற்றும் தடுப்புகளை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

