/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத எட்டிமூர்த்தி குளம்
/
பராமரிப்பில்லாத எட்டிமூர்த்தி குளம்
ADDED : பிப் 08, 2026 05:10 AM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் உள்ள எட்டிமூர்த்தி குளம் பராமரிக்கப்படாமல் உள்ளது.
பள்ளிப்பட்டு பேரூராட்சியில், சித்துார் சாலையில் அமைந்துள்ளது எட்டிமூர்த்தி குளம். கடந்த, 2013ல் இந்த குளத்தை பேரூராட்சி நிர்வாகம், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைத்தது.
அப்போது குளக்கரையில் நடைபாதையும், கம்பிவேலியும் அமைக்கப்பட்டது. அமைதியான சூழலில் அமைந்த இந்த நடைபாதையில் பகுதி மக்கள் தினசரி நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பராமரிப்பு இல்லாததால், தற்போது இந்த குளம் சீரழிந்துள்ளது. குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலி சிதைந்துள்ளது.
இதனால், நடைபயிற்சியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
நடைபயற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்புகருதி, எட்டிமூர்த்தி குளத்தை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

