/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீரமைக்கப்படாத பள்ளிப்பட்டு கோர்ட் சாலை
/
சீரமைக்கப்படாத பள்ளிப்பட்டு கோர்ட் சாலை
ADDED : மார் 17, 2024 12:43 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு நகரில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் கூட்டு சாலையில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டு கோர்ட். இந்த கோர்ட் வளாகத்திற்கு அருகே, கடந்த ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலத்திற்கு இணைப்பு சாலை சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், இதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரிக்கு வரும் ஏராளமான கனரக வாகனங்களால், இந்த பாலம் சீரழியும் நிலை உள்ளது.
பாலத்தை கடந்து செல்லும் வாகனங்களால், புழுதி பறக்கிறது.
இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், கோர்ட்டிற்கு வரும் வழக்கறிஞர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதிய தரைப்பாலமும் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

