/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதுாரில் சுகாதார சீர்கேடு சாலையில் ஓடும் கழிவுநீர்
/
புதுாரில் சுகாதார சீர்கேடு சாலையில் ஓடும் கழிவுநீர்
புதுாரில் சுகாதார சீர்கேடு சாலையில் ஓடும் கழிவுநீர்
புதுாரில் சுகாதார சீர்கேடு சாலையில் ஓடும் கழிவுநீர்
ADDED : ஜன 30, 2024 10:30 PM

பாண்டூர்:திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ள எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது புதுார் கிராமம். இங்கு காலனி, பாளையம், கிராமம் என மூன்று பகுதிகளுக்கு உட்பட்டு, 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் கழிவுநீர் வெளியில் செல்ல முறையாக கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் கிராமம், காலனியில் சேகரமாகும் கழிவுநீர் காலனி பகுதிக்கு செல்லும் சாலை மீது பெருக்கெடுத்து செல்வதுடன் சாலை சேதமடைந்து உள்ளதால் ஆங்காங்கே தேங்கி உள்ளது.
இதனால் அப்பகுதி அசுத்தமாக காட்சியளிப்பதுடன் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளதாக அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கழிவுநீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.