/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாடில்லாத எம்.எல்.ஏ., அலுவலக கட்டடம்
/
பயன்பாடில்லாத எம்.எல்.ஏ., அலுவலக கட்டடம்
ADDED : நவ 26, 2025 04:58 AM
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு நகரில், சோளிங்கர் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திற்கு முன் எம்.எல்.ஏ., அலுவலக கட்டடம் உள்ளது.
பள்ளிப்பட்டு சட்டசபை தொகுதி, தொகுதி மறுசீரமைப்பு வரையின் கீழ், கடந்த 2008ல் திருத்தணி சட்டசபை தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளிப்பட்டில் செயல்பட்டு வந்த எம்.எல்.ஏ., அலுவலகமும் கைவிடப்பட்டது.
பயனின்றி சீரழிந்து வரும் இந்த அலுவலக கட்டடத்தை அரசின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வி டுத்துள்ளனர்.
அங்கன்வாடி மையம், இ- சேவை மையம், ரேஷன் கடை, மகளிர் சுயஉதவி குழு கட்டடம் என ஏதாவது பொது பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் கட்டடம் பராமரிக்கப்படும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

