/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உப்பளம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பு
/
உப்பளம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பு
ADDED : நவ 24, 2024 03:02 AM

பொன்னேரி மீஞ்சூர் ஒன்றியம்,கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட உப்பளம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், கடந்த ஆண்டு, இங்கிருந்த பழைய பள்ளி கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
அங்கு, குழந்தைநேய பள்ளி மேம்பாட்டு உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக பள்ளியின் முகப்பில் இருந்த சுற்று சுவர், 30 மீ.நீளத்திற்கு இடிக்கப்பட்டது.
கட்டடம் கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு வந்த நிலையில், இடிக்கப்பட்ட சுற்றுசுவர் மீண்டும்கட்டாமல் அப்படியே போடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து நம்நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தற்போது, பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.