/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று பாலம் இரும்பு சட்டம் பகுதி சேதம்
/
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று பாலம் இரும்பு சட்டம் பகுதி சேதம்
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று பாலம் இரும்பு சட்டம் பகுதி சேதம்
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று பாலம் இரும்பு சட்டம் பகுதி சேதம்
ADDED : பிப் 20, 2025 01:54 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல், 2017ம் ஆண்டு, 27.8 கோடி ரூபாயில், மத்திய சாலை நிதி திட்டத்தின் சார்பில், பாலம் கட்ட துவங்கி, 2021ம் ஆண்டு பணிகள் முடிந்து, தற்போது பயன்பாட்டில் உள்ளது.
இந்த பாலம், 450 மீட்டர் துாரம், 15 மீட்டர் அகலத்தில் உள்ளது. இரண்டு பக்கமும், 1.5 மீட்டர் சாலை உள்ளது. இதன் வழியே ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், திருவள்ளூரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு செல்கின்றனர்.
இதேபோல, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம், சத்தியவேடு, தடா, காளஹஸ்தி, வரதயபாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இந்த பாலத்தை கடந்து ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றனர்.
தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. பாலத்தின் சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில், இரும்பு சட்டம் வாயிலாக இணைக்கப்பட்டு உள்ளது.
போந்தவாக்கத்தில் இருந்து, ஊத்துக்கோட்டை நோக்கி வரும் நிலையில், பாலத்தின் தொடக்கத்தில் உள்ள இரும்பு சட்டம் உள்ள பகுதி தேசம் அடைந்துள்ளது. கலெக்டர் பிரதாப், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.