/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் உற்சவர் திருவீதியுலா
/
திருத்தணி கோவிலில் உற்சவர் திருவீதியுலா
ADDED : பிப் 19, 2024 11:08 PM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவர் முருகப் பெருமான் காலை மற்றும் இரவு நேரத்தில் ஒவ்வொரு வாகனத்திலும் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று காலை, 10:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அன்னவாகனத்தில் எழுந்தருளினார். பின் தேர்வீதியில் அருள்பாலித்தார்.
இரவு, 7:00 மணிக்கு. வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகர் தேர்வீதியில் அருள்பாலித்தார்.
நேற்று மாசி பிரம்மோற்சவம் மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
மேலும் நுாறு ரூபாய் சிறப்பு தரிசனத்தில் ஒரு மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

