/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குமாரகுப்பத்தில் உற்சவர் வீதியுலா
/
குமாரகுப்பத்தில் உற்சவர் வீதியுலா
ADDED : ஜன 30, 2024 01:39 AM

திருத்தணி:
ஆண்டுதோறும் ஒரு முறை திருத்தணி அடுத்த குமாரகுப்பம் கிராமத்தில் உற்சவர் முருகப்பெருமான் திருவீதியுலா வந்து அருள்பாலிப்பார். அந்த வகையில் நடப்பாண்டில் நேற்று உற்சவர் முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் குமாரகுப்பம் கிராமத்தில் வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.
இதையொட்டி, நேற்று மதியம், 4:00 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான் மலைப்படிகள் வழியாக மேல் திருத்தணி வந்தடைந்தார்.
பின், அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவர் எழுந்தருளி, முருகூர் வழியாக குமாரகுப்பம் கிராமத்திற்கு சென்றனர்.
பின் அங்குள்ள பஜனை கோவிலில், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், அனைத்து வீதிகளிலும் உலா வந்து அருள்பாலித்தார்.
உற்சவர் முருகர் திருவீதியுலா வருவதை ஒட்டி பெண்கள் தங்களது வீடுகள் முன் வண்ணகோலமிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். நள்ளிரவில் உற்சவர் முருக பெருமான் மீண்டும் முருகன் மலைக்கோவிலுக்கு வந்தடைந்தார்.