/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிப்., 14 வரை கோழிகளுக்கு தடுப்பூசி
/
பிப்., 14 வரை கோழிகளுக்கு தடுப்பூசி
ADDED : பிப் 03, 2024 11:20 PM
திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில், 2.78 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம், பிப்., 14 வரை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெருவாரியான மக்கள் கோழிகளை வளர்த்து, அதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டி, தங்களது குடும்ப செலவினங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 2.78 லட்சம் கோழிகள் பராமரிக்கப்படுகிறது. கோழிகளுக்கு கழிச்சல் நோய் பாதிப்பால், கிராம மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
இந்நோய் தாக்குதலால், கோழிகள் உடல் நலம் குன்றியும், சுறுசுறுப்பின்றி உறங்கியபடி இருக்கும். தீவனம், தண்ணீர் உட்கொள்ளாமல் இருக்கும்.
இதை தடுக்கும் வகையில், பிப்., 1 - 14 வரை, இரண்டு வாரம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நகரம், கிராமம் மற்றும் குக்கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி, கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.