தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பராமரிப்பு இல்லாத வானியன் குட்டை

பராமரிப்பு இல்லாத வானியன் குட்டை

பராமரிப்பு இல்லாத வானியன் குட்டை


ADDED : பிப் 20, 2025 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 01:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பந்தியூர்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி. இப்பகுதியிலிருந்து, பண்ணுார் செல்லும் நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அருகே வானியன் குட்டை என்ற குளம் உள்ளது.

இந்த குளத்து நீரை பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த குளம் போதிய பராமரிப்பு இல்லாததால் செடிகள் வளர்ந்து குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து புதர் மண்டி துார்நாற்றம் வீசுகிறது.

இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயம் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வானியன் குட்டை என்ற குளத்தை துார்வாரி சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us