தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வி.ஏ.ஓ., அலுவலகம் சேதம்

வி.ஏ.ஓ., அலுவலகம் சேதம்

வி.ஏ.ஓ., அலுவலகம் சேதம்


ADDED : பிப் 16, 2025 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ஒரத்தூர் ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கல், முதியோர் உதவித்தொகை, ஜாதி, வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த கட்டடம் கட்டப்பட்டு, 25 ஆண்டுகளை கடந்த நிலையில், கட்டடத்தில் கான்கிரீட் பெயர்ந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விண்ணப்பிக்க வரும் கிராம மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

எனவே, சேதமடைந்த கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us