/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளம் துார்வார பக்தர்கள் கோரிக்கை
/
வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளம் துார்வார பக்தர்கள் கோரிக்கை
வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளம் துார்வார பக்தர்கள் கோரிக்கை
வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளம் துார்வார பக்தர்கள் கோரிக்கை
ADDED : மார் 14, 2024 10:02 PM

கும்மிடிப்பூண்டி:வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளத்தை துார் வாரி, முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவரைப்பேட்டை அருகே, அரியத்துறை கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க வரமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலின் அருகே, பரந்து விரிந்துக் காணப்படும் குளம் ஒன்று உள்ளது.
அதில், பக்தர்கள் நீராடி, வரமூர்த்தீஸ்வரரை வழிபடுவது வழக்கம். அந்த குளத்தின் ஒரு பகுதியில் படிகற்கள் பெயர்ந்தும், குளத்திற்குள் மண் சரிந்து, அதில் புற்கள் வளர்ந்தும் துார்ந்து போய் காணப்படுகிறது. கோவில் குளத்தை துார் வாரி, குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.