/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கருடாத்ரி ரயில் முன் வி.சி.வினர் மறியல்
/
கருடாத்ரி ரயில் முன் வி.சி.வினர் மறியல்
ADDED : டிச 21, 2024 10:33 PM
திருத்தணி:மத்திய உள்துறை அமைச்சர் அமிர்ஷா, அம்பேத்கர் குறித்து பேசிய சர்ச்சையால் திருத்தணியில் கொடும்பாவி எரிப்பு, மனித சங்கலி போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாவட்ட துணை செயலர் ஆறுமுகம் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக சென்னை சென்டரல் செல்லும் கருடாத்ரி விரைவு ரயில் திருத்தணி ரயில் நிலையத்தில் நின்ற போது, வி.சி.,வினர் ரயில் முன் நின்று மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் திருத்தணி போலீசார் ஒன்றிணைந்து, மறியலில் ஈடுபட்ட, 23 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால், கால்மணி நேரத்திற்கு மேல் கருடாத்ரி விரைவு ரயில் திருத்தணியில் நின்றது.