ADDED : ஜன 18, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம், கற்குழாய் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த, 'டாடா பிக்அப்' மினி வேனை நிறுத்தினர். போலீசாரை கண்டதும், வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுனர் தப்பியோடி விட்டார்.
போலீசார் வாகனத்தை சோதனையிட்டதில், அதில், அரை யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் மணலுடன் வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.