/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூர் வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே வாகனங்கள் ஆக்கிரமிப்பு
/
பொதட்டூர் வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே வாகனங்கள் ஆக்கிரமிப்பு
பொதட்டூர் வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே வாகனங்கள் ஆக்கிரமிப்பு
பொதட்டூர் வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே வாகனங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஏப் 26, 2025 02:00 AM

பொதட்டூர்பேட்டை'பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அத்திமாஞ்சேரிபேட்டை சாலையில், வருவாய் ஆய்வாளர் அலுவலகமும், அதன் அருகே வி.ஏ.ஓ., அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே உள்ள மரத்தடியில், ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
குறுகலான இந்த சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், அந்த வழியாக அத்திமாஞ்சேரிபேட்டைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இந்த பகுதியில் கூடாரம் அமைத்து கடைகள் நடத்துபவர்களால் சாலை மேலும் குறுகலாக உள்ளது. விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.
அருகில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரின் பெற்றோர் அச்சத்தில் தவித்து வருகின்றனர். சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களையும், கடைகளையும் அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

