/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் வரிசைகட்டும் வாகனங்கள் அத்திப்பட்டில் வாகன ஓட்டிகள் பீதி
/
சாலையில் வரிசைகட்டும் வாகனங்கள் அத்திப்பட்டில் வாகன ஓட்டிகள் பீதி
சாலையில் வரிசைகட்டும் வாகனங்கள் அத்திப்பட்டில் வாகன ஓட்டிகள் பீதி
சாலையில் வரிசைகட்டும் வாகனங்கள் அத்திப்பட்டில் வாகன ஓட்டிகள் பீதி
ADDED : ஜூலை 21, 2025 11:49 PM

மீஞ்சூர், வல்லுார் - எண்ணுார் துறைமுக சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்படுவதால், மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மீஞ்சூர் அடுத்த வல்லுார் சாலை சந்திப்பில் இருந்து, அத்திப்பட்டு புதுநகர் வழியாக காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு செல்லும் சாலை உள்ளது.
இச்சாலையில் எரிவாயு முனையங்கள், சிமென்ட் தொழிற்சாலை, பெட்ரோலிய முனையங்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இச்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால், மற்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இடையே கால்நடைகள் மற்றும் குடியிருப்புவாசிகள் திடீரென சாலையை கடக்கும்போது விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இச்சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், அவற்றிற்கு தேவையான 'பார்க்கிங்' வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.