/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிப்படை வசதிகள் இல்லாத வெள்ளேரிதாங்கல் சுடுகாடு
/
அடிப்படை வசதிகள் இல்லாத வெள்ளேரிதாங்கல் சுடுகாடு
ADDED : பிப் 05, 2025 02:15 AM

வெள்ளேரிதாங்கல்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வெள்ளேரிதாங்கல் ஊராட்சி. இப்பகுதியில், இறந்தவர்களை தகனம் செய்வதற்காக பாப்பரம்பாக்கம் செல்லும் சாலையோரம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுடுகாடு பகுதியைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சுடுகாடு போதிய பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சுடுகாடு பகுதியில், சாலை, தண்ணீர் போன்ற எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாததால், கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், சுடுகாடு பகுதியில் மதுபிரியர்கள் மது அருந்து இடமாக மாற்றியுள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சுடுகாடு பகுதியை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, வெள்ளேரிதாங்கல் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.