/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெள்ளியூர் விடுதி வார்டன் சஸ்பெண்ட்
/
வெள்ளியூர் விடுதி வார்டன் சஸ்பெண்ட்
ADDED : ஏப் 03, 2025 07:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளியூர்:திருவள்ளூர்- செங்குன்றம் சாலையில் அமைந்துள்ளது வெள்ளியூர். இங்கு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே இருந்தனர். மேலும் அங்குள்ள வார்டன், போஸ்கோ என்பவர் பணியில் இல்லை. கலெக்டர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்யுமாறு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, போஸ்கோ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

