/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
18 ஆண்டுகளாக தண்ணீர் வசதியில்லை கால்நடை மருத்துவமனையில் அவலம்
/
18 ஆண்டுகளாக தண்ணீர் வசதியில்லை கால்நடை மருத்துவமனையில் அவலம்
18 ஆண்டுகளாக தண்ணீர் வசதியில்லை கால்நடை மருத்துவமனையில் அவலம்
18 ஆண்டுகளாக தண்ணீர் வசதியில்லை கால்நடை மருத்துவமனையில் அவலம்
ADDED : ஏப் 06, 2025 10:57 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கணேசபுரம் கிராமத்தில், கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனை, 2007ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, வியாசபுரம், பழையனூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், தங்கள் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர்.
தினமும் 150க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை துவங்கி 18 ஆண்டுகளான நிலையில், இதுவரை மருத்துவமனை பயன்பாட்டிற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.
இதனால் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருவோர் மற்றும் மருத்துவர்கள் சிகிச்சை முடிந்த பின் கை கழுவ தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். தற்போது, 2 கி.மீ., தூரத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது.
எனவே, கணேசபுரம் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர, கால்நடை துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தி உள்ளனர்.