/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறைக்குள் 'வீடியோ கால்' வக்கீல் கைதாகி விடுதலை
/
சிறைக்குள் 'வீடியோ கால்' வக்கீல் கைதாகி விடுதலை
ADDED : அக் 21, 2024 02:45 AM
புழல்:புழல் சிறையில், ஆனந்த் என்கிற கல்லறை ஜான், 38, என்பவர் அடைக்கப்பட்டு உள்ளார். இவரைப் பார்க்க, கே.கே.நகரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரியதர்ஷினி, 26, என்பவர், நேற்று முன்தினம் புழல் சிறைக்கு வந்திருந்தார்.
அப்போது, 'வீடியோ கால்' பேச தன் மொபைல் போனை, ஆனந்திடம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த சிறை போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
சிறைக்குள் தடை செய்யப்பட்ட மொபைல் போனை மறைத்து வைத்து, கைதிக்கு கொடுத்து உதவியது குறித்து, சிறை அதிகாரிகள் புழல் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின்படி புழல் போலீசார், பிரியதர்ஷினியை கைது செய்து, காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். சிறை போலீசாரிடம் தகராறு செய்தது தொடர்பாக, ஏற்கனவே இவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.