ADDED : அக் 11, 2024 09:47 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உட்கோட்டம், பொதட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசவராஜகுப்பம் பகுதியைச் சேர்ந்த சிலர் பாண்டரவேடு பகுதியில் வசிக்கும் சமூகத்தினரை தவறாக சித்திரித்து வீடியோ பதிவிட்டிருந்தனர்.
பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் இதுபோன்று இரு சமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுத்தும் விதத்தில் வீடியோ எடிட்டிங் செய்யும் நபர்கள் மற்றும் வீடியோ பரப்பும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
