/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
ADDED : மார் 06, 2025 02:24 AM

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், கடமலைப்புத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 50. இவருக்கு, மின்னல்சித்தாமூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை உள்ளது.
இந்த மனையில், பட்டா எண் தவறாக உள்ளதால், அதை மாற்றம் செய்யக்கோரி, மின்னல்சித்தாமூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி, 59, என்பவரை அணுகினார்.
இதற்கு சுப்பிரமணி, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத பச்சையப்பன், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை, பச்சையப்பன் நேற்று சுப்பிரமணியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சுப்பிரமணியை கைது செய்தனர். சுப்பிரமணி இரண்டு மாதங்களில் ஓய்வு பெற உள்ளார்.