/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நந்தியாற்றில் மீன்பிடிப்பதில் கிராம மக்கள் ஆர்வம்
/
நந்தியாற்றில் மீன்பிடிப்பதில் கிராம மக்கள் ஆர்வம்
ADDED : டிச 09, 2024 02:12 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் மதுரா ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நந்தியாறு செல்கிறது. சில நாட்களுக்கு முன், 'பெஞ்சல்' புயலால் பெய்த மழை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை மற்றும் சோளிங்கர் ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் நந்தியாற்றில் கலந்து வெள்ளமாக செல்கிறது.
இந்நிலையில், சாமந்திபுரம் அருகே நந்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், இரண்டு நாட்கள் தரைப்பாலத்தின் மீது போக்குவரத்துக்கும் மற்றும் மக்கள் நடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று, வெள்ளம் குறைந்து தண்ணீர் தரைப்பாலத்திற்குள் செல்வதால் கிராமத்தினர் மற்றும் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் தரைப்பாலத்தில் நின்றவாறு, வலைகள் மற்றும் துாண்டில்கள் வாயிலாக மீன் பிடிப்பதில் மும்மரமாக ஈடுபட்டனர். சிலர் ஆபத்தான முறையில் தரைப்பாலம் ஒரத்தில் நின்றும் மீன் பிடித்தனர்.