/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில் பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம்
/
தொழில் பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம்
ADDED : பிப் 16, 2024 10:06 PM
திருவள்ளூர்:தொழில் பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம், வரும், 21ல் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக வேலை வாய்ப்பு துறை வாயிலாக, தொழில் பழகுனர் பயிற்சி ஆள் சேர்ப்பு முகாம், செங்கல்பட்டு ஐ.டி.ஐ., வளாகத்தில் வரும், 21ல் நடக்கிறது.
பல்வேறு தொழில் பிரிவுகளை சார்ந்த, ஐ.டி.ஐ., பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு, தனியார், மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு வாயிலாக நடத்தப்பட உள்ள முகாமில், என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., முறையில் கல்வி பயின்ற பயிற்சியாளர் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில் நேரிலோ, ricentreambattur@gmail.com என்ற, இ - மெயில், 94442 24363, 94869 39263 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.