/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாக்காளர் விண்ணப்பத்தை 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்
/
வாக்காளர் விண்ணப்பத்தை 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்
வாக்காளர் விண்ணப்பத்தை 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்
வாக்காளர் விண்ணப்பத்தை 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்
ADDED : நவ 12, 2025 10:08 PM
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவத்தை, 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அமல்படுத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம், வீடு, வீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள், படிவத்தை பூர்த்தி செய்து, தங்கள் பகுதியின் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரிடம், டிச., 4ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
தற்போது, வாக்காளர் வசதிக்காக, தேர்தல் ஆணையம் https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் கணக்கீட்டு படிவத்தை வெளியிட்டு, 'ஆன்லைன்' மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள், பதிவு செய்யப்பட்ட மொபைல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, 'ஆன்லைனில்' விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக, வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் புகாரை, மாவட்ட தேர்தல் உதவி மையத்தின், 73051 58550 என்ற மொபைல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், சட்டசபை தொகுதி வாரியாக அமைக்கப்பட்ட உதவி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

