ADDED : ஜன 26, 2025 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணியில், வருவாய் துறையின் சார்பில், தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, தாசில்தார் மலர்விழி தலைமையில் நடந்தது.
இதில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா பங்கேற்று, கொடியசைத்து வைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
இதில், தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பேரணியில் வாக்காளர்கள் கடமைகள் மற்றும் அனைவரும் கட்டாயம் ஓட்டுளிக்க வேண்டும், ஓட்டுரிமையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய விளம்பர பதாகைகள கையில் ஏந்தி அனைவரும் ஓட்டுளிக்க வேண்டும் என, கோஷம் எழுப்பிவாறு, திருத்தணி நகர் முழுதும் ஊர்வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.***

