/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாக்காளர் தினத்தை முன்னிட்டு வினாடி- - வினா போட்டி
/
வாக்காளர் தினத்தை முன்னிட்டு வினாடி- - வினா போட்டி
வாக்காளர் தினத்தை முன்னிட்டு வினாடி- - வினா போட்டி
வாக்காளர் தினத்தை முன்னிட்டு வினாடி- - வினா போட்டி
ADDED : ஜன 18, 2024 01:28 AM
திருவள்ளூர்:வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு, வரும் 21ம் தேதி வினாடி - வினா போட்டி நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் எதிர்வரும் பார்லி., தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவருக்கும் தேர்தல் நடைமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, 14வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாநில அளவில் பொது மக்களுக்கான வினாடி - வினா போட்டி, வரும் 21ம் தேதி காலை 11:00 - 11:15 மணி வரை இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோர், https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விபரங்களை, இன்று மற்றும் நாளைக்குள் பதிவு செய்யலாம்.
போட்டியில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளரின் மொபைல்போன் எண் மற்றும் இ - மெயிலை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். 'இந்தியாவில் தேர்தல்கள்' என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.